கனடாவின் (Canada) ஒன்ராறியோ (Ontario) பகுதியில் இருந்து பரவிய காட்டுத்தீப் புகையால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கனடாவைக் கிண்டல் செய்துள்ளார்.
அந்தப் படத்தில், அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே “Clean air. Clean borders.” என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட காற்று சுத்திகரிப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு அமெரிக்கக் காற்றை “நஞ்சாக்குவதாக” டிரம்ப் சாடியுள்ள போதிலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அமெரிக்காவினால் வழங்கப்படவில்லை.
கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), வறட்சியே இந்தத் தீ விபத்துகளுக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.
தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia – B.C.) சுமார் 140 காட்டுத்தீச் சம்பவங்கள் தொடர்கிறது.
அதைக் கட்டுப்படுத்த யூக்கான் பாதுகாப்புப் படை (Yukon Protective Services), ஆல்பர்ட்டா வைல்ட் பயர் (Alberta Wildfire) மற்றும் மெக்சிகோ (Mexico) ஆகிய அமைப்புகள் கனடாவிற்கு உதவி வருகின்றன.
