Stratford-ஐ சேர்ந்த 64 வயதான Sonya Larson, தனது மகன் Kevin Larson-க்கு சொந்தமான The Hub on the Docks உணவகத்திற்கு 2023 அக்டோபரில் தீ வைத்ததை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அவர் உணவகத்திற்கு தீ வைக்க மூன்று முறை முயன்றுள்ளார். மூன்றாவது முயற்சியில் உணவகம் தீக்கிரையானது.
இந்தத் தீ விபத்தால் $1.7 மில்லியனுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை தன்னாலும் விளக்க முடியவில்லை என்றும், அந்தக் காலத்தில் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மனநிலையில் இருந்ததாகவும் Sonya நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தண்டனை வழங்கும் முன் பேசிய அவரது மகன் Kevin, தாயை தண்டிப்பதற்காக தான் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றும், இந்தச் சம்பவத்தைத் தாண்டி குடும்பம் முன்னேறவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் திட்டமிட்டு பலமுறை தீ வைக்க முயன்றது மிகவும் தீவிரமான விடயம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரு வருட சிறைத்தண்டனையும், அதனைத் தொடர்ந்து இரண்டு வருட probation-உம் விதித்தார். மேலும் Sonya 60 மணிநேர சமூக சேவையும் மேற்கொள்ள வேண்டும்.
சொந்த மகனின் உணவகத்திற்கே ஒரு தாய் ஏன் தீ வைத்தார்? — இந்தக் கேள்விக்கான தெளிவான பதில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
