டொராண்டோவில் பெண் ஒருவர் மின்சாரப் பட்டியல் கட்டணத்திற்காக 8000 டொலர் செலுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மின்சார கட்டணத்தை ஒன்லைன் மூலம் செலுத்தும் போது $84.72 எனும் தொகைக்குப் பதிலாக குறித்த பெண் 8,472 டொலர் செலுத்தியுள்ளார்.
கம்யூட்டர் மூலம் பணம் செலுத்தும் பழக்கமுள்ள கான் என்ற இந்தப் பெண், இம்முறை கைபேசியைப் பயன்படுத்தியதால் டெசிமல் பாயிண்ட் போட மறந்து விட்டார்.
இந்த தவறு சில நாட்கள் கழித்து மட்டுமே அவருக்குத் தெரிய வந்தது. ஏனெனில், வாடகை மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்தும் போது கணக்கில் பணம் இல்லாததை கவனித்தார்.
“இதுவரை யாரும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த அனுபவம் ஒரு சிரமமான பயணமாகவே இருந்தது,” எனக் கூறுகிறார் கான்.
CTV News இந்த விவகாரத்தில் தலையிட்டு, Metergy Solutions-ஐ தொடர்புகொண்ட பிறகே நிலைமை மாறியது. மொத்தம் $8,000 க்கும் மேற்பட்ட தொகையை திருப்பி பெற கான் எதிர்பார்த்ததைவிட ஒரு மாதம் பிடித்தது.
Metergy தரப்பில், “மீட்டெடுப்பு செயல்முறை துவங்கிய நிலையில், வாடிக்கையாளரின் கோரிக்கையின் அடிப்படையில் நாங்கள் e-transfer வழியாக பணத்தை அனுப்பியுள்ளோம்,” என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கான் தனது உண்மையான பில் தொகையைத் தவிர்ந்த மொத்தத் தொகையையும் திரும்பப் பெற்றதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நிபுணர்கள் அறிவுறுத்துவது போல, ஒன்லைன் மூலம் பில்களை செலுத்தும் போது மூன்று முறை சரிபார்த்து பின் பணம் செலுத்த வேண்டியது அவசியம், இல்லையெனில் இப்படிப்பட்ட சிக்கல்கள் வரக்கூடும்.