பிராம்ப்டன் குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, இருவர் தப்பியோட்டம்!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றினுள் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குறைந்தது இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Sandalwood Parkway மற்றும் Crown Victoria Drive சந்திப்புக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக Peel பிராந்திய பொலிஸாருக்கு இரவு 7 மணிக்குப் பின்னர் அவசர அழைப்பு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் காணப்பட்ட நபரை மீட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்துப் பேசிய ஊடகத் தொடர்பு அதிகாரி Tyler Bell, “கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த நடுத்தர உடல்வாகு கொண்ட இருவர், நான்கு கதவுகள் கொண்ட கருப்பு நிற கார் (Sedan) ஒன்றில் தப்பியோடியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த நபர் அந்த வீட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும், இலக்கு வைக்கப்பட்டு இந்தத் துப்பாக்கிச் சூடு (Targeted Shooting) நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் போது வீட்டிற்குள் மேலும் பலர் இருந்துள்ளனர். எனினும், இது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சீரற்ற தாக்குதல் அல்ல என்று கூறியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles