பிக்கரிங் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இருவர் மீது காரொன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் ஒரு பெண் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிங்ஸ்டன் வீதிக்கு மேற்கே சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் இருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்து நடந்த பின்னர் காயமடைந்தவர்களை துரிதமாக மீட்பதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. எனினும், குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும், விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.