பாதுகாப்பு எச்சரிக்கைக்கு கனடாவிடம் சரியான பதில் இல்லை – அமெரிக்கா அதிருப்தி!

வட அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon), கனடாவிற்கு இரகசிய ஆவணமொன்றை (Classified paper) வழங்கியுள்ளது.

இதற்கு ஒட்டாவா (Ottawa) முறையான அல்லது நம்பகத்தகுந்த பதிலை வழங்கவில்லை என அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் Donald Trump நிர்வாகத்தின் கீழ், கூட்டுப் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் F-35 போர் விமானக் கொள்முதல் தாமதம் குறித்து அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இருதரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் குழுவான Permanent Joint Board on Defense இன் செயல்பாடுகளையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

NATO அமைப்பின் இலக்குகளின்படி, கனடா 2025 இல் 63.4 பில்லியன் டாலர்களைப் பாதுகாப்பிற்காகச் செலவிட்டு, முதன்முறையாக அதன் 2% GDP இலக்கை எட்டியுள்ளது.

மேலும், வரும் 5 ஆண்டுகளில் 82 பில்லியன் டாலர்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty-இன் ஊடகப் பிரிவுத் பணிப்பாளர் Alice Hansen தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 2035 ஆம் ஆண்டிற்குள் 5% GDP என்ற புதிய NATO இலக்கை அடைய கனடாவிடம் தெளிவான திட்டவரைவு இல்லை என பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புச் செலவினங்களின் வெளிப்படைத்தன்மை குறித்த நிதி வரைபடத்தை பிரதமர் Mark Carney சமர்ப்பிக்க வேண்டும் என கனடாவின் முன்னாள் நிதி கண்காணிப்பாளர் Kevin Page வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles