ஸ்கார்பரோ கடையில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் – சந்தேக நபரைக் தேடும் பொலிஸார்!

டொராண்டோவின் (Toronto) ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடை ஒன்றிற்குள், 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை (Sexual assault) கொடுத்த சந்தேக நபரை அடையாளம் காண டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த மே 12 அன்று மாலை 4 மணியளவில், பின்ச் அவென்யூ ஈஸ்ட் மற்றும் மெக்கோவன் ரோடு (Finch Avenue East and McCowan Road) பகுதியில் உள்ள ஒரு கடையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடையில் இருந்த சிறுமியை அணுகிய அந்த நபர், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பின்தொடர்ந்துள்ளார்.

பின்னர் அவளைப் பிடிக்க முயன்றபோது, சிறுமி தனது குடும்பத்தினருக்கு விபரத்தைக் கூறியுள்ளார்.

சிறுமியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அந்த நபரைத் தடுத்துக் கேள்வி எழுப்பியபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அவர் 20 முதல் 30 வயதுடையவர் என்றும்  கண்ணாடி அணிந்திருந்தாகவும் அடையாளம் கூறப்படுகிறது.

கடைசியாக அவர் பின்னோக்கித் திருப்பியவாறு வெள்ளை நிற லோகோ கொண்ட பச்சை நிற நைக் (Nike) தொப்பி, பச்சை நிற முழுக்கை டி-சர்ட் மற்றும் இடது காலில் வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டிராக் பேண்ட் (Track pants) அணிந்திருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 416-808-7474 என்ற எண்ணிலோ அல்லது கிரைம் ஸ்டாப்பர்ஸ் (Crime Stoppers) மூலமாகவோ பொலிஸார்யைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles