பாதுகாப்பற்ற இடத்தில் தங்கியிருக்கும் பிரதமர் – 24 Sussex Drive இல்லம் குறித்து விரைவில் அதிரடி முடிவு!

கனடியப் பிரதமரின் தற்போதைய தற்காலிக இல்லமான Rideau Cottage, போதிய இடவசதி அற்றது என்றும் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்று எச்சரித்துள்ளது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமர்கள் தங்கிவரும் இந்த இல்லம், ஒரு பிரதமரின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என Michael Sabia-வுக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாழடைந்த நிலையில் உள்ள பிரதமரின் உண்மையான உத்தியோகபூர்வ இல்லமான 24 Sussex Drive-ஐ புனரமைப்பதா அல்லது புதிய இல்லத்தை உருவாக்குவதா என்பது குறித்து பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

இந்த இல்லத்தைப் புனரமைக்க சுமார் 100 மில்லியன் டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்களான Jean Chrétien மற்றும் Stephen Harper ஆகியோர் இதற்கு நிதி திரட்ட முன்வந்த போதிலும், அரசியல் காரணங்களால் அது முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டின் வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த இல்லத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என Heritage Ottawa போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles