பாட்டியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறுவன் செய்த குளறுபடி – $2,000 அபேஸ்!

கனடா, ஒன்ராறியோவின் வஸாகா பீச் (Wasaga Beach, Ont.) பகுதியைச் சேர்ந்த 8 வயதுப் சிறுவன் டொமினிக் (Dominic), ‘ரோப்ளாக்ஸ்’ (Roblox) கேமிற்குள் ஆடை மற்றும் உபகரணங்களை வாங்கியதன் மூலம் இரண்டு மாதங்களில் $2,000 டொலர்களை செலவழித்துள்ளார்.

தனது பாட்டியான லின் ராம்ஸ்பொட்டம் (Lynne Ramsbottom) என்பவரின்  கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியே சிறுவன் மேற்படி ஆடைகளை வாங்கியுள்ளான்.

 “நான் பாட்டியின் கைப்பையை (Purse) சோதித்து அவரது கார்டு விபரங்களைப் பெற்றுக்கொண்டேன்” என அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

எனினும், தான் செலவழிப்பது நிஜப் பணம் என்று தெரியாமல் விளையாட்டாகவே சிறுவன் இதனைச் செய்துள்ளான்.

பாட்டிலின் இது குறித்து ரோப்ளாக்ஸ் (Roblox) நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, “இந்தக் கொள்வனவுகள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மூலம் செய்யப்பட்டுள்ளதால், எங்களால் பணத்தைத் திருப்பித் தர முடியாது” என அந்நிறுவனம் கையை விரித்துள்ளது.

இந்தத் தொகையை இழந்தது தமக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக லின் தெரிவித்துள்ளார்.

வீடியோ கேம்கள் விளையாடும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், ஆப் ஸ்டோர்களில் கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகளை (Parental Controls) அமைக்குமாறு அவர் கவலையுடன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்குப் பதிலாக கிப்ட் கார்டுகளை (Gift Cards) பயன்படுத்துமாறும் நுகர்வோர் அறிக்கை (Consumer Reports) அமைப்பின் நிக்கோலஸ் டி லியோன் (Nicholas De Leon) எச்சரித்துள்ளார்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles