றொரண்டோ மாநகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel) மீதான OPP விசாரணையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்காபரோவின் (Scarborough) இரண்டு கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, பார்த்தி கந்தவேல் கட்டுமான நிறுவனங்களிடம் (Developers) “பெருந்தொகை” பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கென்னடி வீதியில் (Kennedy Road) உள்ள ஒரு திட்டத்தில் 21 மற்றும் 42 மாடிகளைக் கொண்ட குடியிருப்புகளைக் கட்டும் முயற்சிக்கு அனுமதி பெறப் பணம் கோரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் கூறும் ‘சமூக நலக் கட்டணங்களைத்’ (Community benefits charge) தாண்டி, மேலதிகமாகப் பணம் கேட்கப்பட்டதாக ஒரு கட்டுமான முகவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீதான இந்த விசாரணையால் தாம் “வியப்படைந்துள்ளதாக”வும், நேர்மையைப் பேண விரும்புவதாகவும் பார்த்தி கந்தவேல் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) விசாரணை நடப்பதை உறுதி செய்துள்ள போதிலும், மேலதிக விபரங்களை வழங்க மறுத்துவிட்டனர்.
மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) இது ஒரு நேரடி விசாரணை என்பதால் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இது மாநகர சபையில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.










