நயாகராவில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகலிலேயே தீவிரமாகக் கடிக்கும் இந்தக் கொசு குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Niagara Region-இன் Lincoln பகுதியில், “Asian Tiger Mosquito” என அழைக்கப்படும் நுளம்பு வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் நுளம்பு, Ontario-வின் Windsor பகுதியில் 2016 முதல் கண்டறியப்பட்டு வருகிறது.
பொதுவாக இரவு அல்லது மாலை நேரங்களில் அதிகமாகக் கடிக்கும் நுளம்புகளைப் போலல்லாமல், இந்த Asian Tiger நுளம்பு பகல் நேரத்திலேயே மனிதர்களை கடிக்கக்கூடியது என Niagara Region Public Health தெரிவித்துள்ளது.
இந்த வகை நுளம்புகள் West Nile virus, Dengue, Chikungunya, Zika உள்ளிட்ட வைரஸ்களை பரப்பக்கூடிய திறன் கொண்டவை.
எனினும், தற்போது Lincoln பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நுளம்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித virus-மும் கண்டறியப்படவில்லை. மேலும், தற்போதைக்கு நயாகரா பகுதியில் இந்த நோய்கள் தொடர்பான அபாய நிலையில் மாற்றமில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










