நீதியமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்த சங்கரி!

புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார்.

ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக புதிய பிரதமர் வரையறுத்துள்ளார்.

இந்த நிலையில், கெரி ஆனந்த சங்கரிக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர் ஒருவர் கனடா அரசியலில் பெற்ற மிக உயர்த்த அந்தஸ்தாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

கெரி சங்கரியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles