கனடாவின் றொரண்டோ Toronto நகரில் காணாமல் போன 23 வயது நிரம்பிய Christine என்ற பெண்ணைக் கண்டுபிடிக்க றொரண்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில், Dixon Road மற்றும் Martin Grove Road சந்திப்புப் பகுதியில் இவர் இறுதியாக காணப்பட்டுள்ளார்.
5 அடி 7 அங்குல உயரமும் மெலிந்த உடலமைப்பும் கொண்ட இவர், குட்டையான பழுப்பு நிற முடிகளைக் கொண்டுள்ளார்.
கடைசியாகக் காணப்பட்டபோது, இவர் ஊதா நிற ஹூட் ஸ்வெட்டர் (purple hooded sweater), கருப்பு நிற ஸ்வெட்பேண்ட்ஸ் (black sweatpants) மற்றும் மஞ்சள் நிற செருப்பு (yellow sandals) அணிந்திருந்தார்.
அவரது பாதுகாப்பு குறித்து பொலிஸார் தீவிர கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த 600 Dixon Road முகவரியில் சிறப்புத் தேடுதல் மையம் (Command post) ஒன்றையும் அமைத்துள்ளனர்.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக 416-808-2300 என்ற தொலைபேசி எண்ணில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
