நாற்பது ஆண்டுகளுக்கும் தமிழினம் சார்ந்து பத்தி எழுதி வந்த முக்கியமான அரசியல் எழுத்தாளர்களில் ஒருவரான டிபிஎஸ்.ஜெயராஜ் கனடாவில் காலமானார்.
இலங்கைத் தமிழ் அரசியல், இனப்பிரச்சினை, ஆயுதப் போராட்டம், தமிழீழ இயக்கங்கள், கொழும்பு அரசியல், இந்தியா–இலங்கை உறவுகள், மற்றும் தமிழ் தேசிய அரசியலின் உள்மன உலகம் ஆகியவற்றைக் தத்ரூபமாக எழுதி வந்தவர் ஆவார்.
தமிழ் வாசகர்களுக்கு அவர் “DBS” என்றே பரவலாக அறிவர்.
ஆங்கிலத்தில் அவர் எழுதினாலும், அவரது எழுத்துகள் தமிழ் அரசியல் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
DBS இலங்கையின் வடபகுதிக் கிராமமான கரவெட்டியை சேர்ந்தவர். யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் கல்விசார், அரசியல் சார்ந்த சூழலில் வளர்ந்த அவர், இளமையிலிருந்தே எழுத்து, விவாதம், அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இலங்கை சட்டக் கல்வியை இடையில் விடுத்து கொழும்பு ஊடக உலகிற்குள் முக்கியமாக வீரகேசரிக்குள் தமிழ் ஊடகவியலாளராக நுழைந்தார்.
பின்னர் இலங்கையின் முக்கிய ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிய அவர், குறிப்பாக The Island, Daily Mirror, Lanka Guardian போன்றவற்றில் எழுதி வந்தார்.










