கியூபாவில் (Cuba) ஏற்பட்டுள்ள பாரிய மின்சாரத் தடை காரணமாக சுமார் 11 மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், கியூபாவின் ஆட்சி மாற்றத்தைக் குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்டுள்ள கருத்துக்கள் கனடாவில் வாழும் கியூப வம்சாவளியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மொன்றியலில் (Montreal) உள்ள ‘Le Cecilia’ உணவக உரிமையாளர் Alexy Dias Arcia மற்றும் சமூக ஆர்வலர் Antonio Tang ஆகியோர், கியூபாவில் நிலவும் பொருளாதாரச் சரிவு மற்றும் உணவுத் தட்டுப்பாடு குறித்துத் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கியூபா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கியூபா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளதோடு, வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கியூபாவில் புதிய தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“கியூப அரசு பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது” எனத் கவலை தெரிவிக்கும் கியூபா மக்கள், இந்த நெருக்கடியிலிருந்து மீள ஒரு ‘அதிசயம் நிகழும் என காத்திருப்பதாக அங்கலாய்க்கின்றனர்.










