கனடாவில் diesel விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் திகதி தேசிய சராசரி விலை லிட்டருக்கு சுமார் 2 டொலர் 75 சென்ட்களை எட்டியுள்ளது.
இதன் தாக்கம் diesel வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் அல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு கனடியரின் அன்றாடச் செலவுகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
நாம் வாங்கும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், தளபாடங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் லொறிகள், ரயில்கள், கப்பல்கள் மூலமாகவே கடைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
Diesel விலை அதிகரித்தால் இந்த போக்குவரத்து செலவு அதிகரிக்கும். அந்த கூடுதல் செலவை நிறுவனங்கள் இறுதியில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக்கூடும்.
இதனால் grocery bill முதல் delivery charges வரை பல செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த diesel விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விநியோக பாதிப்புகள், சுத்திகரிப்பு பிரச்சினைகள் மற்றும் ரஸ்ய சுத்திகரிப்பு ஆலைகள் மீது இடம்பெறும் Ukrainian தாக்குதல்கள் ஆகியவை உலக diesel விநியோகத்தை மேலும் இறுக்கமாக்கியுள்ளன.
Canada-வில் சொந்த சுத்திகரிப்பு ஆலை இருப்பது ஓரளவு சாதகமானது. ஆனால் உலக சந்தையில் விநியோகம் குறைந்தால் அதன் தாக்கத்திலிருந்து Canada முழுமையாக தப்ப முடியாது.
