கனடாவில் வாழும் மிக வயதான நபரான Marie Rosa, தனது 111வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.
Toronto, Etobicoke பகுதியில் இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி பிறந்த Marie Rosa, முதலாம் உலகப் போர் காலம் முதல் இன்றைய நவீன உலகம் வரை ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான மாற்றங்களை தனது வாழ்நாளில் கண்டுள்ளார்.
Marie Rosa குடும்பத்திலும் நீண்ட ஆயுள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை 105 வயது வரை வாழ்ந்ததுடன், அவரது சகோதரி 103 வயதில் உயிரிழந்தார்.
தனது தாயின் ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு காய்கறிகளை அதிகம் விரும்பி உண்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது மகள் கூறுகிறார்.
ஆனால் Marie Rosa சொல்லும் நீண்ட வாழ்க்கைக்கான மிக முக்கியமான அறிவுரை மிகவும் எளிமையானது.
மகிழ்ச்சியாக வாழுங்கள், அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் அன்பான அரவணைப்பைக் கொடுங்கள் என்பதே அவரது வாழ்க்கைச் செய்தி.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் retirement home ஊழியர்களின் அன்பில் சூழப்பட்ட Marie Rosa, 111 வயதிலும் தனது புன்னகையாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
