டவுன்டவுனில் துப்பாக்கிமுனை கொள்ளை – $1 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருட்டு!

றொரண்டோ டவுன்டவுன் (Downtown) பகுதியில் கடந்த மே 10ஆம் திகதி அதிகாலை 4:50 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிமுனை கொள்ளைச் சம்பவத்தில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என றொரண்டோ பொலிஸார் (Toronto Police) தெரிவித்துள்ளனர்.

Spadina Avenue மற்றும் Bremner Boulevard பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களை, முகமூடி அணிந்த நான்கு ஆயுததாரிகள் துப்பாக்கிமுனையில் மிரட்டி இந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் திருடப்பட்ட வாகன இலக்கத் தகடு கொண்ட நீல நிற Nissan Rogue காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னதாக இந்த நகைகளின் மதிப்பு $500,000 என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 1 மில்லியன் டாலருக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

Related Articles

Latest Articles