சுத்தமற்ற ஊசியால் வந்த வினை – பர்லிங்டன் மருத்துவமனை மீது $5 மில்லியன் நஷ்டஈடு வழக்கு!

கனடாவின் பர்லிங்டன் (Burlington) நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபர் ஒருவருக்கு, சுத்தமற்ற ஊசி பயன்படுத்தப்பட்டதால் ஹெபடைடிஸ் சி‘ (Hepatitis C) தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Darwin Allen என்ற நோயாளி, Halton Family Health Centre மற்றும் மருத்துவர் Timothy Salter ஆகிய தரப்புக்களுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்திற்காகச் சிகிச்சை பெறச் சென்றபோது, இவருக்குச் சுத்திகரிக்கப்படாத ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்ட போதே, இவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்றும், உரிய மருத்துவத் தரநிலைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles