கனடாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் முதலாம், இரண்டாம் தலைமுறை கனடியர்கள், பெரும்பாலும் லிபரல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக கனடிய தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Nanos Research நிறுவனம் CTV News மற்றும் Globe and Mail-க்காக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 46 வீதமானோர் லிபரல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் 35.8 வீதமானோர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பிறந்த, இரண்டாம் தலைமுறையினர் அதாவது தாத்தா அல்லது பாட்டி அல்லது மூத்தவர்களில் 47 வீதமானவர்கள் லிபரல்களுக்கு ஆதரவாகவும், 37.1 வீதமானோர் கன்சர்வேட்டிவ்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
நேரடியாக குடிபெயர்ந்தவர்களில் 46 வீதமானோர் லிபரலுக்கும் 42.7 வீதமானோர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
NDP மற்றும் கிரீன் கட்சிகள் பெரும்பாலான குடிபெயர்ந்தவர்களிடையே குறைவான ஆதரவையே பெற்றுள்ளன.
இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 21 முதல் 23 வரை 1,307 பேரைத் தேர்வு செய்து இணையம் மற்றும் தொலைபேசி மூலம் நடத்தப்பட்டுள்ளது.