கனடா (Canada) மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கார்டி ஹோவ் சர்வதேச பாலம் (Gordie Howe International Bridge) திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அது திட்டமிட்டபடி திறக்கப்படுமா என்பது குறித்து விண்ட்சர்-டெட்ராய்ட் பாலம் அதிகார சபையின் (WDBA) முன்னாள் தலைவர் டுவைட் டங்கன் (Dwight Duncan) அச்சம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அதனையடுத்து, அமெரிக்காவுடனான கூட்டுத் திறப்பு விழாவை கனடா ரத்து செய்ததுடன், கனேடிய அதிகாரிகளுடன் மட்டும் திறப்பு விழாவை நடத்தியது.
அமெரிக்க அதிகாரிகளின் பங்கேற்பு இல்லாதது துரதிர்ஷ்டவசமானது எனவும், ட்ரம்பின் நிர்வாகம் திறப்புக்கு அனுமதிக்குமா என்பது குறித்து உறுதியற்ற தன்மை நிலவுவதாகவும் டங்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அமைச்சரான கிரகோர் ராபர்ட்சன் (Gregor Robertson), அமெரிக்காவுடன் எட்டப்பட்ட கொள்கை ரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலம் திறக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆண்டிற்கு 300 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை ஏந்திச் செல்லவுள்ள இந்தப் பாலம், சுமார் 25 முதல் 40 ஆண்டுகால நீண்டகால முயற்சிகளின் பலனாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
