காதலியைச் சுட்டுக்கொன்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிக்குத் தண்டனை குறைப்பு!

தனது காதலியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் சஸ்காட்சுவான் (Saskatchewan) பொலிஸ் அதிகாரியின் தண்டனை காலத்தைக் குறைத்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் RCMP பொலிஸ் அதிகாரியான பேர்னி ஹெர்மன் (Bernie Herman), கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேடன் ஹெர்மன் (Braden Herman) என்பவரைச் சுட்டுக்கொன்று, அவரது உடலைப் பிரின்ஸ் ஆல்பர்ட் (Prince Albert) பகுதிக்கு வெளியே உள்ள காட்டில் வீசிச் சென்றார்.

ஆரம்பத்தில் இவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், 2024 ஜனவரியில் அது கொலை’ (Manslaughter) என உறுதி செய்யப்பட்டது.

இவருக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஆண்டுகால சிறைத் தண்டனையை ரத்து செய்த சஸ்காட்சுவான் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal for Saskatchewan), அதனை தற்போது 7 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 9 நாட்களாகக் குறைத்துள்ளது.

குற்றவாளிக்கு முன்னைய குற்றப் பின்னணிகள் இல்லாமை, அவரது சமூக சேவை மற்றும் மீண்டும் குற்றம் இழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பது போன்ற காரணங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுளள்ளது.

பேர்னி ஹெர்மன் (Bernie Herman) தான் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்ததாக வாதிட்ட நிலையில், அதனை நீதிமன்றம் பகுதியளவில் ஏற்றுக்கொண்டு இத்தண்டனை குறைப்பை வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பானது கனடா (Canada) சட்டத்துறையில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33

Related Articles

Latest Articles