கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 1.2 கோடி மக்களுக்காக Canada Groceries and Essentials Benefit எனும் புதிய நிதி உதவித் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், 2026 வசந்த காலத்தில் ஒருமுறை வழங்கப்படும் விசேட தொகையாக (One-time top-up), தனிநபர்களுக்கு $402 வரையும், இரண்டு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு $805 வரையும் கூடுதல் நிதி வழங்கப்படவுள்ளது.
இந்தத் தொகை வரும் ஜூன் மாதத்திற்குள் தகுதியுள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
மேலும், ஜூலை 2026 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (Quarterly) வழங்கப்படும்.
இந்தச் சலுகையைப் பெற மக்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை; ஆனால் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான வரி அறிக்கைகளை (Tax Returns) தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
GST Credit திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த உதவி, பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.










