கனடிய அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் – தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் என ஆய்வாளர்கள் விமர்சனம்!

வலுசக்தித் துறையில் (Energy Sector) பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக Carney அரசாங்கம் வெளியிட்டுள்ள “நிலையான வேலைகள் செயல் திட்டம்” (Sustainable Jobs Action Plan), புதிய சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த  பெப்ரவரி மாதம் Natural Resources Canada வெளியிட்ட இந்த அறிக்கை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் தொகுப்பு மட்டுமே என கனடிய தொழிற்சங்க காங்கிரஸ் (Canadian Labour Congress) தலைவர் Bea Bruske தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் Donald Trump-இன் வரிவிதிப்புகள், செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி மற்றும் பசுமை உற்பத்திக்கு மாறும் சூழலில், இத்திட்டம் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என NDP இடைக்காலத் தலைவர் Don Davies மற்றும் செனட்டர் Hassan Yussuff ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, அல்கோமா ஸ்டீல் (Algoma Steel) போன்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஆட்குறைப்பு மற்றும் சிறிய சமூகங்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க காலக்கெடு இன்றி இந்த அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு “வெற்றுச் செய்திக் குறிப்பு” போல இருப்பதாக ஆய்வாளர் Hadrian Mertins-Kirkwood விமர்சித்துள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles