கனடாவில் பால் பொருட்களில் கண்ணாடித்துண்டுகள்! –  Agropur உற்பத்திகள் அவசரமாக மீளழைப்பு!

கனடாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான அக்ரோபுர் (Agropur), தனது சில பால் பொருட்களில் கண்ணாடித்துண்டுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவற்றை சந்தையிலிருந்து அவசரமாக மீளழைப்பதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மீளழைப்பு நடவடிக்கையானது முக்கியமாக நேட்ரல் (Natrel), பார்மர்ஸ் (Farmers) மற்றும் கெபோன் (Québon) ஆகிய பிராண்டுகளின் பால் மற்றும் சாக்லேட் பால் தயாரிப்புகளைப் பாதிக்குமென கூறப்படுகிறது.

குறிப்பாக, நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு (PEI) பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட பார்மர்ஸ் பிராண்ட் பால் வகைகள் மற்றும் கியூபெக்கில் (Quebec) விநியோகிக்கப்பட்ட கெபோன் சாக்லேட் பால் ஆகியவை இதில் அடங்கும்.

தேசிய அளவில், ஏப்ரல் 6 முதல் மே 15 வரையிலான காலாவதித் திகதி கொண்ட Natrel 1% Lactose Free Chocolate Milk (2 லிட்டர் கார்டன்கள்) இந்த மீளழைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

வாங்கிய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அல்லது வாங்கிய இடத்திலேயே ஒப்படைக்குமாறு கனடிய உணவு ஆய்வு நிறுவனம் (CFIA) நுகர்வோரை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles