கனடாவில் தொழில்புரிவோர் உலகில் அதிக அழுத்தத்தில் உள்ளனர்! ஆய்வுத் தகவல்

உலகளாவிய தொழிலாளர் மனநிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கனடியர்கள் உலகின் மிக அதிக அழுத்தத்தை சந்திக்கும் பணியாளர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் 225,000 பேரிடம் பணியிடம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடியர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் தினசரி மன அழுத்தத்தை சந்தித்து வருவதாக அந்த ஆய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

உலக அளவில் 33 சதவீதமானோர் ‘சிறப்பாக வாழ்கிறோம்’ என கருதுகின்றனர். 58 வீதமானோர் ‘போராடிக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். 9 வீதமானோர் நாம் துயரத்தில் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தரவுகளில், கனடாவில் 53 வீதமானோர் தங்களை சிறப்பாக வாழ்கிறோம் எனக் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவில் 52 வீதமானோரும் ஐரோப்பாவில் 47 வீதமானோரும் தாங்கள் சிறப்பாக வாழ்வதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதற்கான விலையாக அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

வாழ்வியல் செலவுகள், வீட்டு வாடகை, பணவீக்கம் போன்ற பொருளாதார அழுத்தங்களுடன், வேலை இடங்களில் ஆர்வம் குறைந்துள்ளதாக இந்த ஆய்வுத் தகவலில் தெரியவந்துள்ளது.

Video thumbnail
ஸ்காபரோவில் முதியவரின் Rolex கடிகாரத்தை கொள்ளையிட்ட இருவர் கைது!
00:53
Video thumbnail
டொரோண்டோவில் திங்கட்கிழமை கடும் வெயில்
00:46
Video thumbnail
ஸ்காபரோ Kennedy GO நிலைய கட்டுமான போக்குவரத்து இரைச்சல் குறித்து குடியிருப்போர் அதிருப்தி
00:49
Video thumbnail
தங்க கட்டிகள், பணம், போதைப்பொருள் பறிமுதல்👩‍🦰 தோர்ன்ஹில் பெண் கைது!
00:29
Video thumbnail
கனடா போஸ்ட் வேலை நிறுத்தம்! பொதி, கடித விநியோகத்தில் ஸ்தம்பிதம்!
00:48
Video thumbnail
‘X’ பாலின கடவுச்சீட்டு வைத்திருப்போர் சிக்கலுக்கு ஆளாகலாம் என கனடா அரசு எச்சரிக்கை
00:58
Video thumbnail
அமெரிக்க அரசாங்கம் கனடாவிற்கு நவீன ரொக்கட் அமைப்புகள் விற்க ஒப்புதல்
00:59
Video thumbnail
மார்க்கம் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல்! இருவர் கைது!
00:38
Video thumbnail
டொரண்டோ TTC மெட்ரோ நிலையத்தில் பாலியல் தாக்குதல்!
00:35
Video thumbnail
கனடா 51ஆவது மாநிலம் என டொனால்ட் ட்ரம்ப் இராணுவத் தலைமையக உயர் அதிகாரிகள் மத்தியில் உரை
00:58

Related Articles

Latest Articles