கனடாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்று முக்கிய நுகர்வோர் பொருட்கள் தீ விபத்து மற்றும் தீக்காயங்களை (Fire and burn hazards) ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடா சுகாதாரத் துறை (Health Canada) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தைகள் பால் போத்தல்களை கிருமி நீக்கம் செய்யும் இந்த சாதனம் அதிகளவில் சூடாகி உருகும் அபாயம் உள்ளது.
கனடாவில் விற்பனையான 6,001 சாதனங்களில் 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இறக்குமதியாளரான EI Brand Management Inc நிறுவனத்தைத் தொடர்புகொண்டு இலவச மாற்றீட்டைப் பெறலாம்.
இதன் லித்தியம்-அயன் பேட்டரிகள் சூடாகி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் recall செய்யப்படுகின்றன.
கனடாவில் 35,000-க்கும் அதிகமான பேட்டரிகள் விற்பனையாகியுள்ளன.
குறிப்பிட்ட தொடர் எண்களைக் கொண்ட பேட்டரிகளை அகற்றி Bose Corporation நிறுவனத்திடம் இலவச மாற்றீடு பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Amazon.ca மூலம் விற்பனை செய்யப்பட்ட இந்த பவர் பேங்க்கள் வெடிக்கும் அபாயம் கொண்டவை.
வாடிக்கையாளர்களுக்கு Amazon மூலம் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.










