கனடாவில் (Canada) நாடு தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த 19 வயதான கலேப் கிமோதோ (Kaleb Kimotho) என்ற பிராம்ப்டன் (Brampton) நகரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் திகதி பிராம்ப்டன் சென்ட்ரல் பார்க் டிரைவ் (1020 Central Park Drive) பகுதியில் வாகனத்திற்குள் வைத்து இருவர் மீது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இவர் பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வாகனத்தின் பின் இருக்கையில் ஏறிய கலேப் கிமோதோ, வாகனம் நகரத் தொடங்கியதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முன் இருக்கையிலிருந்த இருவர் படுகாயமடைந்தனர்.
கொலை முயற்சி, அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட பல தீவிர குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த இவர், பெரும் றொரண்டோ பகுதியிலுள்ள (GTA) பொலிஸ் படையினரின் உதவியுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
