கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை Agate Road பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒரு குழுவினர் சண்டையிட்டுக் கொள்வதாக போலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு 32 வயதுடைய Erik Safar என்ற நபர் வாகனத்தால் மோதப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

அவரது உடல் நசுங்கிய நிலையில் மிகவும் கொடூரமாகக் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஜூன் 16 அன்று Milan Andras Babos (18) மற்றும் Richard Olah (23) ஆகிய இருவர் பொலிஸாரிடம் சரணடைந்தனர். அவர்கள் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக Dzsenifer Olah (25) என்ற பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கும் இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவரைக் கைது செய்ய பொலிஸார் பிடியாணை பிறப்பித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles