கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!

கனடாவில் பலதுணை உறவுமுறையில் (Polyamory) ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், நாட்டின் சட்டக் கட்டமைப்பு இன்னும் அதற்குத் தயாராகவில்லை எனச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் திருமண உறவில் இருப்பது (Polygamy) சட்டவிரோதமானது.

ஆனால், திருமண ஒப்பந்தம் இன்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பரஸ்பர சம்மதத்துடன் வாழும் ‘Polyamory’ முறை சட்டப்பூர்வமானது.

தற்போதுள்ள குடும்பச் சட்டங்கள் அனைத்தும் இருவர் சார்ந்த உறவுமுறைக்காகவே (Two-person relationships) வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனால் சொத்துரிமை, குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பலதுணை உறவில் இருப்பவர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) போன்ற மாகாணங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களைப் பெற்றோர்களாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், ஆல்பர்ட்டா (Alberta) போன்ற மாகாணங்களில் சட்டங்கள் மிகவும் இறுக்கமாக உள்ளன.

சட்டரீதியான பாதுகாப்பு இல்லாததால், இத்தகைய உறவில் இருப்பவர்கள் தங்களுக்குள் ‘ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை’ (Co-ownership or Cohabitation agreements) உருவாக்கிக் கொள்ளுமாறு சட்டத்தரணிகள் மார்கஸ் சிக்ஸ்டா (Marcus Sixta) மற்றும் ஹிலாரி ஆங்க்ரோவ் (Hilary Angrove) ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், உறவு முறியும் போது நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளன.

Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05
Video thumbnail
றொரண்டோவில் திடீர் குளிர்கால மாற்றம் - வெப்பநிலை வீழ்ச்சியால் மக்கள் அவதி!
01:11
Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15

Related Articles

Latest Articles