கனடாவில் அதிகரிக்கும் ‘சாம்பல் விவாகரத்து’ (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?

கனடாவில் (Canada) ஒட்டுமொத்த விவாகரத்து விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள போதிலும், 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர் பிரியும் ‘சாம்பல் விவாகரத்து’ (Grey Divorce) கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளமை, பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறுதல், பணி ஓய்வு மற்றும் தங்களது எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

50 வயதிற்குப் பின் பிரிந்த Marnie Wraith என்பவர், வாழ்க்கையில் மேலும் புதிய அனுபவங்களையும் சுய வளர்ச்சியையும் பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

இது குறித்து டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த குடும்பச் சட்டத்தரணி Jared Grossman மற்றும் சிகிச்சை நிபுணர் Andrew Sofin ஆகியோர் கூறுகையில்; வயது முதிர்ந்த காலத்தில் குடும்பப் பொறுப்புகள் குறையும் போது, மக்கள் தங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்குகின்றனர்.

இருப்பினும், நீண்டகாலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகான பிரிவில் சொத்துப் பங்கீடு, வீட்டுக் கடன் மற்றும் ஜீவனாம்சம் (Spousal Support) வழங்குவதில் பல்வேறு நிதிச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பிரிவுக்குப் பின்னர் ஆண்கள் மீண்டும் மறுமணம் செய்ய முற்படும் வேளையில், பெண்கள் மறுமணத்தை விடத் நிதிச் சுதந்திரம், நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது மற்றும் வாழ்வதையே அதிகம் விரும்புவதாக உளவியல் நிபுணர் Adam Terpstra தெரிவித்துள்ளார்.

Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03
Video thumbnail
பெலாரஸிடம் பொட்டாஷ் வாங்கும் ட்ரம்ப்பின் முயற்சி - "இரத்த பொட்டாஷ்" என சஸ்கட்வான் முதல்வர் கண்டனம்!
01:44
Video thumbnail
ஜனநாயகக் கட்சியினர் வென்றாலும் அமெரிக்கா-கனடா வர்த்தகப் போரில் மாற்றம் வருமா?
01:22
Video thumbnail
'Simple Investor' நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தம்!
01:10
Video thumbnail
ஸ்கார்பரோ மருத்துவமனை நிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு: 70 வயது தம்பதி பரிதாப பலி!
01:00
Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01

Related Articles

Latest Articles