கனடாவின் புதிய சட்டத்தால் அகதிகள் தவிப்பு – மனிதாபிமான உதவி செய்தவர்களுக்கும் ஆபத்து!

கனடாவின் புதிய குடிவரவுச் சட்டமான C-12, அகதிகள் புகலிடக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரும் தடைகளை உருவாக்கியுள்ளது.

இச்சட்டத்தின்படி, கனடாவிற்கு முதன்முதலில் வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் அகதிகள் கோரிக்கைகள், குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் (Immigration and Refugee Board) விசாரணைக்குத் தகுதியற்றதாகக் கருதப்படும்.

இந்த சட்டமானது 2020-ஆம் ஆண்டு முதல் பின்னோக்கிச் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், Mohammed Al Hindi என்ற பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர், 2023 இல் தனது சகோதரிக்குச் சிறுநீரக தானம் செய்ய கனடா வந்திருந்தார்.

போரின் காரணமாகத் தற்போது அகதியாகக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காசாவில் (Gaza) தற்போது சுகாதார வசதிகள் ஏதுமற்ற நிலையில், இவர் செய்வதறியாது தவிக்கிறார்.

ஈரானைச் (Iran) சேர்ந்த பெண் ஒருவர், அரசியல் கருத்துகளைப் பகிர்ந்ததால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில், இந்தச் சட்டத்தால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

அவர் புற்றுநோய் பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதுபோன்ற சுமார் 30,000 அகதிகள் இத்தகைய அறிவிப்புகளைப் பெறக்கூடும் என்று குடிவரவுத் துறை மதிப்பிட்டுள்ளது.

நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ‘வெளியேற்றத்திற்கு முந்தைய இடர் மதிப்பீட்டை’ (Pre-removal risk assessment) கோரலாம்.

இருப்பினும், அதன் வெற்றி விகிதம் மிகக் குறைவாக காணப்படுவதாக எட்மன்டனைச் (Edmonton) சேர்ந்த சட்ட வல்லுநர் ஜுமான் எல்-அஸ்மர் (Jouman El-Asmar) சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles