கனடாவின் $20 நோட்டு மாறுகிறது! இனி King Charles III

King Charles III-ன் உருவப்படம் இடம்பெறும் புதிய $20 நோட்டினை Bank of Canada அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கனடிய நாணய வரலாற்றில் King Charles III இடம்பெறும் முதலாவது banknote இதுவாகும். மேலும், 70 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு பிறகு புதிய மன்னர் ஒருவர் கனடிய $20 நோட்டில் இடம்பெறுகிறார்.

இதுவரை $20 நோட்டில் இடம்பெற்றிருந்த மறைந்த Queen Elizabeth II-ன் உருவப்படத்திற்கு பதிலாக King Charles III-ன் உருவப்படம் இடம்பெறவுள்ளது.

புதிய $20 நோட்டு வழக்கமான கிடைமட்ட வடிவத்தில் இல்லாமல், செங்குத்தான வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோட்டின் முன்பக்கத்தில் King Charles III-ன் உருவப்படமும், அவரைச் சுற்றி கனடாவின் 13 மாகாணங்கள் பிரதேசங்களை பிரதிபலிக்கும் மலர் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.

நோட்டின் மறுபக்கத்தில், பிரான்சில் அமைந்துள்ள Canadian National Vimy Memorial தொடர்ந்து இடம்பெறுகிறது. முதலாம் உலகப் போரில் கனடா செய்த தியாகங்களை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் போலி நோட்டுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஊதா நிற security strip-ஐ சாய்த்துப் பார்க்கும்போது maple leaf உள்ளிட்ட சில வடிவங்கள் அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். 3D bubble, மாற்றம் அடையும் வடிவங்கள் மற்றும் உயர்த்தப்பட்ட மை போன்ற பாதுகாப்பு மற்றும் accessibility அம்சங்களும் இதில் உள்ளன.

புதிய $20 நோட்டு 2027 பிப்ரவரி இறுதியிலிருந்து படிப்படியாக கனடாவில் புழக்கத்திற்கு வரவுள்ளது.

அதேநேரம் தற்போது பயன்பாட்டில் உள்ள Queen Elizabeth II இடம்பெற்ற $20 நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.

Related Articles

Latest Articles