ஒன்ராறியோவில் அதிக விலைக்கு நிகழ்ச்சி டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரபல online ticket resale நிறுவனமான SeatGeek Canada-க்கு Ontario அரசு $25,000 அபராதம் விதித்துள்ளது.
ஒன்ராறியோவின் புதிய anti-scalping சட்டத்தின் கீழ் ticket resale platform ஒன்றுக்கு விதிக்கப்பட்ட முதலாவது அபராதமாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
SeatGeek-க்கு மூன்று தனித்தனி காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ticket-ஐ அனுமதிக்கப்பட்ட resale விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு $10,000
அந்த ticket முதலில் வாங்கப்பட்ட விலையை வெளிப்படுத்தத் தவறியதற்காக $5,000
மேலும் அதன் அசல் விலைக்கான ஆதாரம் இல்லாமல் விற்பனையை facilitated செய்ததற்காக மற்றுமொரு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, secondary market-ல் ticket ஒன்றை, அது முதலில் வாங்கப்பட்ட மொத்த விலையை மீறி மறுவிற்பனை செய்ய முடியாது. குறிப்பிட்ட secondary-market கட்டணங்கள் மட்டும் விதிகளுக்கு உட்பட்டு சேர்க்கப்படலாம்.
விதிகளை மீறும் ticket sellers-க்கு பெரிய அளவிலான அபராதங்கள் விதிக்கப்படலாம் என Ontario அரசு எச்சரித்துள்ளது.
ஆனால் SeatGeek தரப்பில், ஒரு ticket முதலில் எந்த விலையில் வாங்கப்பட்டது என்பதை சுயாதீன resale platforms உறுதிப்படுத்துவது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
StubHub மற்றும் Vivid Seats போன்ற நிறுவனங்களுடனும் Ontario அரசு புதிய விதிமுறைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
