கனடாவில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீயின் புகையானது அமெரிக்க எல்லைப் பகுதிகளுக்குள் பரவி, மிக்சிகன் (Michigan), ஒஹாயோ (Ohio), இல்லினாய்ஸ் (Illinois), நியூயார்க் (New York), இண்டியானா (Indiana) உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்றுத் தரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதற்குக் கனடாவின் போதிய காடமைப்புப் பராமரிப்பின்மையே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), சாடியிருந்தார்.
இதனால் அமெரிக்காவிற்கு ஏற்படும் பில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஈடுகட்ட கனடா செலுத்தும் வரிகளை (Tariffs) உயர்த்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கலிபோர்னியா (California) மாநில ஜனநாயகக் கட்சி செனட்டர் ஆடம் ஷிப் (Adam Schiff), “முன்பு கலிபோர்னியா காட்டுத்தீயில் எரிந்தபோது கனடா தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும் உதவிகளை அனுப்பியதே தவிர, இழிவுகளை அல்ல” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சுறுத்தல்கள் இன்றி கனடாவிற்கு அமெரிக்க மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி மனிதநேயத்தைக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெருக்கடி காலங்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் தீயணைப்பு வீரர்களை அனுப்பி உதவிக்கொள்ளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
