ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரபலமான Erasmus+ திட்டத்தில் Canada இணைய வேண்டும் என பிரதமர் Mark Carney விருப்பம் தெரிவித்துள்ளார்.
France இல் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய Carney, Canada மற்றும் Europe இடையே இளைஞர்கள் படிக்கவும், வேலை அனுபவம் பெறவும், வாழவும் அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Erasmus திட்டம், பின்னர் Erasmus+ ஆக விரிவுபடுத்தப்பட்டது. மாணவர்கள் மட்டுமன்றி இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான திட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளை இது உள்ளடக்குகிறது. கல்வி, பயிற்சி, வேலை அனுபவத்திற்காக வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல உதவும் EU-funded exchange program இதுவாகும். இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போது 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் Norway, Iceland, Serbia, North Macedonia, Türkiye ஆகிய நாடுகளும் முழுமையாக Erasmus+ திட்டத்தில் பங்கேற்கின்றன.
EU-வில் இல்லாத ஐக்கிய இராச்சியமும் 2027 முதல் Erasmus+ திட்டத்துடன் மீண்டும் இணைய ஒப்பந்தம் செய்துள்ளது.
கனடாவும் இதில் இணைந்தால் கனேடிய மாணவர்களுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கூடுதல் வாய்ப்புகள் உருவாகலாம்; அதேபோல் ஐரோப்பிய மாணவர்களுக்கு கனடாவில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்பது Carney முன்வைக்கும் நோக்கம்.
