2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கனடாவின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
Statistics Canada வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கனடாவில் சுற்றுலாவுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 28.4 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் செலவு 0.9 சதவீதம் அதிகரித்து, 7.2 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளின் கனடாவுக்கான பயணங்களும் 1.4 சதவீதம் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
சுற்றுலாத்துறையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 சதவீதம் வளர்ந்துள்ளதுடன், இந்தத் துறை மூலம் உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் சுமார் 6 லட்சத்து 96 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தங்குமிடங்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்குத் துறைகளுக்கு கிடைத்துள்ள இந்த வளர்ச்சி, கனடாவின் பொருளாதாரத்திற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
