கடாவின் வரலாற்றுச் சிறப்புமிகுந்த சின்னத்திற்கு ஆபத்து –  54 மாடி கட்டிடத் திட்டத்தால் சர்ச்சை!

ஒன்ராறியோவின், லண்டன் (London, Ont.) நகரின் அடையாளமாகத் திகழும் 200 ஆண்டுகள் பழமையான Middlesex County Courthouse கட்டிடத்திற்கு அருகே, 54 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு கோபுரத்தை அமைக்க York Developments நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இடைக்கால ஐரோப்பிய கோட்டை வடிவில் அமைக்கப்பட்ட இந்தத் தேசிய வரலாற்றுச் சின்னத்தின் அருகாமையில் இவ்வளவு பெரிய கட்டிடம் வருவது பாரம்பரிய ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக நான்கு அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்துமிடம் தோண்டப்படவுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தின் அடித்தளத்தைப் பாதிக்கலாம் எனப் பொறியியல் அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இது குறித்து “அதிர்வு கண்காணிப்பு” (Vibration monitoring) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டாலும், அத்திட்டம் கட்டிடத்திற்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, கனடாவில் ஒரு இடம் “தேசிய வரலாற்றுச் சின்னம்” என அங்கீகரிக்கப்பட்டாலும், தனியார் வசம் உள்ள அத்தகைய இடங்களைப் பாதுகாக்கப் பலமான கூட்டாட்சிச் சட்டங்கள் இல்லை என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

G7 நாடுகளில் இத்தகைய பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்க முறையான சட்டங்கள் இல்லாத ஒரே நாடு கனடா தான் என National Trust of Canada கவலை தெரிவித்துள்ளது.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles