ஓய்வுபெற்ற தம்பதியினர் ஏமாற்றம்: $85,000 செலுத்தியும் basement நிர்மாணப் பணிகளை முடிக்காத நிறுவனம்!

மிசிசாகா நகரில் தங்களில் வீட்டில் basement நிர்மாணிப்பதற்கு 85 ஆயிரம் டொலர்களை செலவிட்ட போதும் அந்தப் பணிகளை குறித்த நிறுவனம் முடிக்காமல், நிறுவனத்தை மூடிவிட்டதாக முறையிட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் ஓய்வுபெற்ற பின்னர் கூடுதல் வருமானம் பெறுவதற்காக basement அமைத்து அதனை வாடகைக்கு விட்டு மேலதிக வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான நிர்மாணப் பணிகளை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து, இரண்டு மாதங்களில் வேலை முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒரு வருடமாக வேலை நிறைவு செய்யப்படவில்லை என குறித்த தம்பதியினர் முறையிட்டுள்ளனர்.

முற்பணமாக $35,000 வழங்கிய தம்பதிகள், பின் மேம்படுத்தும் பணிக்காக மேலும் $50,000 கொடுத்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியதும் வேலை முற்றிலும் குறித்த நிறுவனம் கைவிட்டுள்ளது.

Instagram சமூக வலைத்தள விளம்பரத்தைப் பார்த்து குறித்த நிறுவனத்தை தெரிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த நிறுவனம் “permanently closed” என Google-ல் Update செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் வேலை ஒப்படைத்த பிறகு முடிக்காமல் விட்டதாக சமூக வலைதளங்களில் முறையிடப்பட்டுள்ளது.

Video thumbnail
மார்க்கத்தில் வாள்வீச்சு பயிற்சியாளர் மீது தாக்குதல்: மர்ம நபர்களைத் தேடி போலீஸ் வலைவீச்சு!
00:56
Video thumbnail
வீட்டின் விலை குறைந்தால் பணம் திரும்பத் தரப்படும்: கனடிய கட்டுமான நிறுவனத்தின் அதிரடித் திட்டம்!
01:19
Video thumbnail
மார்க் கார்னியின் பொருளாதாரத் திட்டத்திற்கு கனடியர்களிடம் பலத்த ஆதரவ?
01:11
Video thumbnail
மறுவாழ்வு தந்த மருத்துவமனைக்கு $10 மில்லியன் நன்கொடை: டொராண்டோ வழக்கறிஞரின் நெகிழ்ச்சி செயல்!
00:50
Video thumbnail
கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் அதிகரிப்பு: கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் அவசர ஆலோசனை!
01:00
Video thumbnail
கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது அமெரிக்கா!
00:43
Video thumbnail
கனடாவில் சிறுவர்களைத் தாக்கும் நிமோனியா: வைத்தியசாலை அனுமதிகள் இருமடங்கு அதிகரிப்பு!
01:03
Video thumbnail
பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 66 ஆவது பிறந்த தினமான இன்று கைது!
00:58
Video thumbnail
மிசிசாகாவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
01:11
Video thumbnail
குறுந்தொலைவு பனிச் சறுக்கு போட்டி: கனடாவின் Steven Dubois தங்கம் வென்று சாதனை!
00:39

Related Articles

Latest Articles