ஒழுக்கத்தில் அமெரிக்கர்களை விட முன்னணியில் இருக்கும் கனடியர்கள் –  ஒருவருக்கொருவர் அதிக நம்பிக்கை!

Pew Research Center நடத்திய புதிய ஆய்வின்படி, அமெரிக்கர்கள் தங்கள் சக குடிமக்களை ஒழுக்க ரீதியாக மோசமானவர்களாகக் கருதும் அதேவேளை, கனடியர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பது தெரியவந்துள்ளது.

2025-ஆம் ஆண்டு 25 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடியர்களில் 7% பேர் மட்டுமே தங்கள் சக குடிமக்களை ஒழுக்கமற்றவர்களாகக் கருதுகின்றனர். இது உலகிலேயே மிகக் குறைந்த அளவாகும்.

மாறாக, 53% அமெரிக்கர்கள் தங்கள் சக நாட்டு மக்கள் ஒழுக்கக்கேடானவர்கள் எனக் கருதுகின்றனர்.

கருக்கலைப்பு (Abortion) மற்றும் ஓரினச்சேர்க்கை (Homosexuality) போன்ற விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

அதேபோல், சூதாட்டம் (Gambling) குறித்த விடயத்தில் உலகிலேயே மிகவும் தாராளமான போக்கை கனடியர்கள் (27%) கொண்டுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles