ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு – அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!

ஒன்ராறியோவில் இணையவழி சூதாட்ட சந்தை விரிவுபடுத்தப்பட்ட பின்னர், சூதாட்டப் பழக்கங்களால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Institute for Clinical Evaluative Sciences வெளியிட்ட இந்த ஆய்வு, 14 ஆண்டுகளுக்கான தரவுகளை ஆராய்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் தனியார் நிறுவனங்களுக்கும் இணைய சூதாட்ட சேவைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சூதாட்டச் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டில் மட்டும் ஒன்ராறியோவில் செயல்பட்ட 83 சூதாட்ட இணையத்தளங்களில் சுமார் 26 இலட்சம் கணக்குகள் இருந்ததுடன், மொத்தமாக 82.7 பில்லியன் டொலர் அளவிலான பந்தயங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பிருந்த நிலையை விட, சூதாட்டப் பிரச்சினைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவோர் தற்போது சுமார் 99 வீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக 10 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. 

மேலும், சூதாட்டப் பிரச்சினையுடன் மருத்துவமனைக்கு வந்தவர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானோருக்கு வேறு மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பயன்பாடு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles