சமூக ஊடகங்களில் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பிய இரு ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள், மொத்தம் 80,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ளனர்.
TikTok ஷாப்பில் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் பணி இருப்பதாகவும் ஒருவர் இலக்குவைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், டிஜிட்டல் வொலட்டில் பணம் உள்ளதாக காண்பித்து, அதனை எடுப்பதற்காக பணத்தை வைப்பிலிட வேண்டும் என்று குறித்த நபரிடம் மோசடியாளர்கள் கோரியுள்ளனர். இதனை நம்பி குறித்த நபர் 11,000 டொலர்களை வைப்பிலிட்ட பின்னர் குறித்த பணம் களவாடப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒஷாவாவைச் சேர்ந்த ஒரு பெண் இவ்வாறு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இவர் பல தடவை பணத்தை இவ்வாறு வைப்பலிட்டுள்ளதாகவும் குறித்த பெண் மொத்தமாக 70,000 டொலர்களை இழந்துள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் நம்பிக்கை இல்லாத வகையில் வேலை வாய்ப்புக்களைத் தருவதாக வரும் அறிவிப்புக்களை ஏற்க வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர் க்ளாடியு போபா பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நேரடி சந்திப்போ நேர்காணலோ இல்லாது அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதே ‘அதுவொரு மோசடி’ என்பதற்கான குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக TikTok நிறுவனமும், “மோசடி குற்றவாளிகள் TikTok அல்லது TikTok Shop பெயர்களைப் பயன்படுத்தி நபர்களை ஏமாற்றுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.