ஈரானிய வம்சாவளி கனடா குடிமகனுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு!

ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்ட கனடா குடிமகன் (Canadian Citizen) ஒருவருக்கு, அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படையினர் (CBP – U.S. Customs and Border Protection) அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.

Vancouver International Airport–இல் உள்ள அமெரிக்க முன்கூட்டிய சோதனை மையத்தில் (Preclearance facility) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பயணி முன்பு வைத்திருந்த ஈரானிய கடவுச்சீட்டின் (Iranian Passport) கீழ் விண்ணப்பித்த பழைய அமெரிக்க விசா அண்மையில் நிராகரிக்கப்பட்டதே இந்த நுழைவு மறுப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அவருக்கு குடிவரவு சட்டப்பிரிவு INA 212(a)(7)(A)(i)(I)-இன் கீழ் அனுமதி மறுக்கப்பட்டாலும், நல்லவேளையாக விசா விண்ணப்பத்தை அவராகவே திரும்பப் பெற (Form I-275) அதிகாரிகள் அனுமதித்தனர்.

இதன் மூலம் அவர் 5 வருட நுழைவுத் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பியுள்ளார்.

பொதுவாக கனடா குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல விசா தேவையில்லை என்ற போதிலும், இவர் அமெரிக்க தூதரகத்தை (U.S. Consulate) நாடி முறையாக விசா பெற்றே இனி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க – கனடா எல்லைகளில் தரவுப் பகிர்வு (Data-sharing) மற்றும் சோதனைகள் தற்பொழுது தீவிரமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு நிபுணர் Ken Scott தெரிவித்துள்ளார்.

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles