கனடா–அமெரிக்கா வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க பொருட்கள் மீது கனடா விதிக்கவுள்ள பதிலடி வரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
பிரதமர் Mark Carney, அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு எதிராக dollar-for-dollar அடிப்படையில் பதிலடி நடவடிக்கைகள் Labour Day-க்கு பின்னர் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் எந்த அமெரிக்கப் பொருட்கள் இதில் இடம்பெறும் என்பது தொடர்பான முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அமெரிக்க வரிகளால் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படும் கனேடிய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் Employment Insurance — EI திட்டமும் விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கனடாவின் மாகாண முதல்வர்களுக்கும் இன்று விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிகள் அமலில் உள்ளன.
அதற்கு மேலாக, வரும் ஜனவரி 1 முதல் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் cars, trucks, automotive parts மற்றும் steel மீது வரியை 50 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் Trump மிரட்டியுள்ளார்.
இந்த வர்த்தக மோதலால் Ontario, Quebec மற்றும் British Columbia போன்ற மாகாணங்களில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
பாதிக்கப்படும் தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு grants, loans உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
