அமெரிக்காவிலிருந்து படையெடுக்கும் உண்ணிகள் – கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்திற்குள் பெருமளவிலான உண்ணிகள் (Ticks) படையெடுத்து வருவதாக அக்காடியா பல்கலைக்கழக (Acadia University) பேராசிரியரும், CTRIC அமைப்பின் இயக்குநருமான நிகோலெட்டா பரோன் (Nicoletta Faraone) எச்சரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தினால் கனடாவில் நிலவும் சாதகமான தட்பவெப்பநிலை, இந்த உண்ணிகளின் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கனடாவில் ‘லைம் நோய்’ (Lyme disease) பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஒண்டாரியோவில் பொதுவாகக் காணப்படும் ‘பிளாக்லெக்ட்’ உண்ணிகளைத் தவிர, தற்போது அமெரிக்காவின் தென்பகுதியில் இருந்து ‘லோன் ஸ்டார்’ (Lone star tick) எனப்படும் புதிய வகை உண்ணிகளும் எல்லையோரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த லோன் ஸ்டார் உண்ணி கடித்தால், மனிதர்களுக்கு ‘ஆல்பா-கால் சிண்ட்ரோம்’ (AGS) எனப்படும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை ஏற்படலாம்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றி, ஆடு, மாடு போன்ற சிவப்பு இறைச்சிகளைச் (Red meat) சாப்பிடும் போது கடுமையான ஒவ்வாமைப் பாதிப்புக்குள்ளாவார்கள்.

காடுகள் அல்லது புல்வெளிகளுக்குச் செல்லும் போது ‘DEET’ அல்லது ‘Icaridin’ அடங்கிய பூச்சி விரட்டிகளைப் (Repellents) பயன்படுத்த வேண்டும்.

கைகள், கால்களை முழுமையாக மூடும் வெளிர் நிற ஆடைகளை அணிவது உண்ணிகளை எளிதாகக் கண்டறிய உதவும்.

வெளியில் சென்று வீடு திரும்பியதும் உடலைச் சோதிப்பதுடன், ஆடைகளை அதிக வெப்பம் கொண்ட ட்ரையரில் (Dryer) உலர வைப்பதன் மூலம் உண்ணிகளை அழிக்கலாம்.

செல்லப்பிராணிகள் மூலமும் இவை வீட்டிற்குள் பரவலாம் என்பதால் அவற்றுக்கும் தகுந்த பாதுகாப்பு மருந்துகளை வழங்க வேண்டும்.

ஒருவேளை உண்ணி கடித்தால், அதை நசுக்காமல் மெதுவாக ‘ட்வீசர்’ (Tweezers) கொண்டு நேராக மேலே இழுத்து அகற்ற வேண்டும் என ஒண்டாரியோ சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles