சார்லட்டவுன் Charlottetown நகரில் நடைபெறும் First Ministers’ Meeting மாநாட்டில், கனேடிய பிரதமர் Mark Carney (மார்க் காரினி) உடன் மாநில மற்றும் பிராந்திய முதல்வர்கள் (Premiers) வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் Donald Trump (டொனால்ட் ட்ரம்ப்) கனடா மீதான வர்த்தகப் போரை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிரான கனடாவின் பேச்சுவார்த்தைத் திட்டத்தைத் தெளிவுபடுத்துமாறு முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள அல்லது அச்சுறுத்தியுள்ள 50 சதவீத கூடுதல் வரிகளுக்கு (50% Tariffs) எதிராக, அடுத்த 29 நாட்களுக்குள் பிரதமர் Carney ஒரு வலுவான திட்டத்துடன் முன்வர வேண்டும் என Ontario (ஒன்டாரியோ) முதல்வர் Doug Ford (டக் போர்ட்) மற்றும் Alberta (அல்பெர்ட்டா) முதல்வர் Danielle Smith (டேனியல் ஸ்மித்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மென்மைப்போக்கைக் கைவிட்டு, வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Softwood Lumber (மென்மரங்கள்), உலோகம், அலுமினியம் மற்றும் வாகன உற்பத்தித் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தமே (CUSMA renewal) தற்போதைய சூழலில் நாட்டிற்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்பதில் அனைத்து முதல்வர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.
கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc (டொமினிக் லெப்லாங்க்) மற்றும் சிறப்புப் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடனான வர்த்தக அழுத்தங்களைக் கையாளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
