கனடாவின் மிக வயதான பெண்மணி : நீண்ட ஆயுளின் ரகசியம்!

றொரண்டோ Toronto  நகரில் உள்ள The Village of Humber Heights ஓய்வு இல்லத்தில் வாழும் Marie Rosa (மேரி ரோசா), கனடாவின் மிக வயதான வாழும் நபராக (Canada’s oldest living person) அதிகாரப்பூர்வமாகக் கௌரவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுள்ளார்.

1915-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-இல் பிறந்த Marie Rosa, முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் Great Depression (பெரும் பொருளாதார வீழ்ச்சி) போன்ற பல வரலாற்றுச் சவால்களைக் கடந்து வாழ்ந்துள்ளார்.

அண்மையில் 103 வயதில் காலமான தனது சகோதரி Virginia Del Brocco (வர்ஜீனியா டெல் புரோக்கோ) உட்பட பலரின் இழப்புகளைச் சந்தித்தபோதிலும், வாழ்க்கையை நேர்மறை எண்ணத்தோடு அணுகுகிறார்.

இவரின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் குறித்து அவரது மகள் Cathie Sinisalo (கேத்தி சினிக்சாலோ) கூறுகையில், “எல்லோரையும் நேசியுங்கள்; ஒவ்வொரு மனிதரும் மதிப்புமிக்கவர்களே. நீங்கள் அன்பைக் கொடுத்தால், அன்பே உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்” என்பதே Marie Rosa-வின் முக்கிய வாழ்க்கை மந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதையும் வீணடிக்காத சிக்கனமான வாழ்வியல் முறை, குடும்பத்தின் மீதான அளவற்ற அன்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் வாகனம் ஓட்டுவதில் இருந்த விருப்பமே இவரை இத்தனை ஆண்டுகள் உற்சாகத்துடன் வாழ வைத்துள்ளன.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles