பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மகன் பலியான விவகாரம் – $17.5 மில்லியன் நஷ்டஈடு கேட்டு பெற்றோர் வழக்கு!

கனடாவின் இன்னிஸ்பில் பகுதியில், சவுத் சிம்கோ பொலிஸாரின் (South Simcoe Police) துப்பாக்கிச்சூட்டில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது குடும்பத்தினர் பொலிஸாருக்கு எதிராக $17.5 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

2024 ஆகஸ்ட் 15 அன்று, ஷோர்வியூ டிரைவ் (Shoreview Drive) பகுதியில் உள்ள லியாம் ஹேட்டன் (Liam Hatton) என்பவரது வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லியாம் உயிரிழந்தார்.

அவரது இரட்டைச் சகோதரரான டிலான் (Dylan) 5 முறை சுடப்பட்டு, படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

உதவி கேட்டு அழைத்த நிலையில், பொலிஸார் நிலைமையை மிகவும் கொடூரமாகக் கையாண்டு தங்கள் மகனைக் கொன்றுவிட்டதாகப் பெற்றோரான பில் ஹேட்டன் (Bill Hatton) மற்றும் ராபின் ஜாக்சன் (Robin Jackson) வேதனை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிலான் மீது பொலிஸார் சுமத்திய குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு (Crown) பின்னர் திரும்பப் பெற்றது.

இந்தச் சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கை சட்டபூர்வமானது என சிறப்பு விசாரணைப் பிரிவு (Special Investigations Unit – SIU) பொலிஸாரைக் குற்றமற்றவர்கள் எனக் கூறியிருந்தது.

தற்போது பொலிஸாரின் அலட்சியப் போக்கே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி, குடும்ப வழக்கறிஞர் ஆஷா ஜேம்ஸ் (Asha James) மூலமாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேலதிக தகவல்களை வழங்க முடியாது என சவுத் சிம்கோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles