அரசு நிதி உதவி நிராகரிக்கப்பட்ட போதிலும், கனடியத் தயாரிப்பான ‘Undertone’ என்ற திகில் திரைப்படம் வட அமெரிக்க வசூல் சந்தையில் முதல் வாரத்திலேயே 9.3 மில்லியன் டொலர்களை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
வெறும் 5 இலட்சம் டொலர் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம், இவ்வாண்டின் மிகப்பெரிய எதிர்பாராத வெற்றியாகக் கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸ்-கனடிய இயக்குநரான Ian Tuason, தனது சொந்த வீட்டில் இத்திரைப்படத்தைப் படமாக்கியுள்ளார்.
“அரசு நிதியுதவி வழங்கும் அமைப்புகள் தகுதியான படங்களைத் தேர்வு செய்வதில்லை” என அவர் விமர்சித்துள்ளார்.
‘The Handmaid’s Tale’ புகழ் Nina Kiri மற்றும் ‘White Lotus’ நட்சத்திரம் Adam DiMarco ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், ஒரு பெண்ணின் தனிமை மற்றும் உளவியல் ரீதியான பயத்தை மையமாகக் கொண்டது.
இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை பிரபல A24 நிறுவனத்தின் வசமாகியுள்ளது.
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக, புகழ்பெற்ற ‘Paranormal Activity’ தொடரின் அடுத்த பாகத்தை இயக்கும் வாய்ப்பு Ian Tuason-க்கு கிடைத்துள்ளது.
தனது வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு உதவ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










