கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு (Antisemitism) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், யூத மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கனடா தனது அணுகுமுறையில் “குறிப்பிடத்தக்க மாற்றத்தை” ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
ஒட்டாவாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் Iddo Moed, டொராண்டோ (Toronto) பகுதியில் உள்ள மூன்று யூத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி இதனை வலியுறுத்தியுள்ளார்.
கனடா தனது ஜனநாயக விழுமியங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுப்பவர்களைத் தடுக்க சில “சுதந்திரங்களை” மட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog மற்றும் வெளியுறவு அமைச்சர் Gideon Sa’ar ஆகியோர் கனடிய அமைச்சர்களுடன் இது குறித்துப் பேசியுள்ளனர்.
குறிப்பாக ஈரான் ஆதரவு குழுக்களின் ஆதிக்கம் கனடாவில் அதிகரித்து வருவதாகவும், அது யூத சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே மிரட்டல் விடுப்பதைத் தடுக்கும் நோக்கில் Bill C-9 என்ற புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது










